Newsபெண் விஞ்ஞானிகளை மறந்த ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளிகள்

பெண் விஞ்ஞானிகளை மறந்த ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளிகள்

-

ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளி அறிவியல் படிப்புகளில் பெண் விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

150 ஆண் விஞ்ஞானிகள் குறிப்பிடப்பட்டாலும், ஒரே ஒரு பெண் விஞ்ஞானியின் பெயர் மட்டுமே பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பது வருத்தமளிப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரிட்டிஷ் வேதியியலாளர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மட்டுமே முழு அறிவியல் தொடரிலும் குறிப்பிடப்பட்ட ஒரே விஞ்ஞானி.

பள்ளிப் பாடத்திட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைத் தவிர்ப்பது பாலின சமத்துவத்திற்கான பிரச்சனையாகவும், பெண் விஞ்ஞானிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயற்பியலில் சிறந்த பங்களிப்பை வழங்கிய மேரி கியூரி போன்ற விஞ்ஞானிகளின் பெயர்கள் ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளி அறிவியல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்படாதது சிக்கலாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண பாடத்திட்ட பரிந்துரையாளர்களுடன் இணைந்து செயல்படுவோம் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேவேளை, விஞ்ஞான பாடத்திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கலைக்களஞ்சியங்களில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த நிலைமை மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...