கோவிட் காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் தொடர்பாக தற்போது குவாண்டாஸ் குழுமம் வைத்திருக்கும் விமானக் கடன்களின் மதிப்பு சுமார் 470 மில்லியன் டாலர்கள் என்று தெரியவந்துள்ளது.
குவாண்டாஸ் மற்றும் ஜெட்ஸ்டார் விமான நிறுவனங்களின் தலைவர்கள் செனட் குழு முன் அழைக்கப்பட்டபோது இது தெரியவந்தது.
குவாண்டாஸ் கடந்த வாரம் இந்த மதிப்பு $370 மில்லியன் என்று கூறியிருந்தாலும், ஜெட்ஸ்டார் வைத்திருக்கும் $100 மில்லியன் விமானக் கடன்களுக்கு அவர்கள் கணக்கு காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
செனட் கமிட்டியின் உறுப்பினர்கள் ஆஸ்திரேலியாவில் அதிக பொது புகார்களைப் பெற்ற நிறுவனம் குவாண்டாஸ் குழுமம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
குவாண்டாஸின் செல்வாக்கு காரணமாக தோஹாவிலிருந்து சிட்னி – மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இடங்களுக்கு விமானங்களை அதிகரிக்க கத்தார் ஏர்வேஸின் கோரிக்கையை அரசாங்கம் தடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கத்தார் ஏர்வேஸின் முக்கிய போட்டியாளராக இருக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒத்துழைப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.