இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் 16-வது ஆசியக் கிண்ண தொடர் நடைபெறுகிறது.
இந்தத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்புகிறது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிக்கான ஒளிபரப்பின் மூலம் மட்டும் பத்து வினாடிக்கு 30 இலட்சம் ரூபாய் வரை disney+ hotstar நிறுவனம் வருமானமாக ஈட்டவுள்ளது.
அதோடு இந்த தொடரின் மற்ற போட்டிகளுக்கு பத்து வினாடிக்கு மூன்று முதல் நான்கு இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட இருக்கிறது.
ஆசிய கிண்ண தொடரில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி வருமானமாக ஹாட் ஸ்டார் நிறுவனம் ஈட்டவுள்ளது. இந்த ஆசிய கிண்ண தொடருக்காக 17 அனுசரணையாளர்கள் , 100-க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கைச்சாத்து செய்துள்ளது.