Newsவிண்ணிற்கு செல்லவுள்ள ஆதித்யா-எல்1

விண்ணிற்கு செல்லவுள்ள ஆதித்யா-எல்1

-

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது இன்று (02) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, இன்று (02) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது.

நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லொக் ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...