ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் காளான் தொடர்பான பொருட்களின் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் காளான் வகையொன்றை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 03 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதிய உணவிற்காக மெல்போர்னில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் ஆசிய அங்காடியில் வாங்கப்பட்ட காளான் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆர்கானிக் காளான் பண்ணைகளில் ஒன்றான புல்லா பார்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மனித பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட காளான் இனங்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நுகர்வுக்குப் பொருத்தமில்லாத டெத் கேப் காளான் வகைகளை உண்ணும் 10 பேரில் 9 பேர் இறந்துவிடுவதாகவும், அத்தகைய இனங்கள் தங்கள் பண்ணைகளில் பயிரிடப்படுவதில்லை என்றும் புலா பார்க் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.