Breaking Newsஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்

-

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நாளை ஒளிபரப்ப பிரித்தானியாவின் சனல் நான்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘தி டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் “சேனல் ஃபோர்” சேனல் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை ஒளிபரப்பி பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், “இலங்கையின் கொலைக்களம்” என்ற சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ளடக்கப்பட்ட உண்மைகள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி, சனல் ஃபோர் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்களை ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய காணொளியை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் “சேனல் ஃபோர்”.

தற்போது தீவை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ஒருவரே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...