Cinemaஇந்தியாவின் பெயரை மாற்ற திட்டம் - அமிதாப் பச்சன் ஆதரவு

இந்தியாவின் பெயரை மாற்ற திட்டம் – அமிதாப் பச்சன் ஆதரவு

-

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் தனது பணி சார்ந்த விஷயங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், இவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மத்திய அரசின் முடிவுக்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவிப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது.

சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...

ஆஸ்திரேலியாவில் மாறுபடும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் வேலையின்மை கடந்த...

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்ன் சிறுமிப் பற்றி எடுக்கப்பட்டுள்ள முடிவு

மெல்போர்னின் ஃபுட்ஸ்க்ரேயில் ஒரு பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுமிக்கு எதிரான ஆணவக் கொலைக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சிறுமி 37 வயதுடைய...

மெல்போர்ன் மற்றும் மோனாஷ் உட்பட பல பல்கலைக்கழகங்களில் ரத்து செய்யப்பட்ட கல்வி நடவடிக்கைகள்

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் காரணமாக, மெல்போர்ன் உட்பட பல பல்கலைக்கழகங்களில் படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தில் பூட்டப்பட்டுள்ளனர், மற்றொரு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை...