அடுத்த இரண்டு மாதங்களில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
07 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதே தனது பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் அல்பானீஸ் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே சற்றே சர்ச்சைக்குரிய சூழ்நிலை நிலவியதுடன், வர்த்தகத் துறையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இரு நாடுகளும் பரஸ்பர ஏற்றுமதிக்கு வர்த்தகம் மற்றும் சுங்க வரிகளை விதிக்கின்றன.
பிரதமர் அல்பானிஸின் சீனப் பயணத்திற்குப் பிறகு இந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.