ஆதித்யா எல் 1 விண்கலம், செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தனது பயணத்தை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 தனது சுற்றுவட்ட பாதையை அதிகரித்துள்ளதாக கடந்த நாட்களில் தெரியவந்தது. இதையடுத்து இன்று செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.