பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக ஆஸ்திரேலியா கடற்கரையில் கைது செய்யப்பட்ட MS Caledonian Sky என்ற சொகுசுக் கப்பலைப் பற்றியும் Fair work ombudsman அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது கூட்டரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு கூடுதலாகும்.
6 மாதங்களாகியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த ஊதியம் வழங்கப்படவில்லை என சர்வதேச போக்குவரத்து தொழிற்சங்கம் நியாயமான பணி விசாரணை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.
எனினும் குறித்த குற்றச்சாட்டை கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
MS Caledonian Sky என்ற கப்பல் தற்போது புரூம் துறைமுகத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை கப்பல் பணியாளர்கள் தேவைப்பட்டால் அரை நாள் விடுப்பில் கரைக்கு வர வாய்ப்பு உள்ளது.
கப்பல் தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் MS Caledonian Sky வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளது.