தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த T20 தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை
வீழ்த்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
அணித்தலைவர் பவுமா 142 பந்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார். மார்கோ ஜான்சன் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர். தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார்.
தொடர்ந்து ஓட்டங்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில், அவுஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
லபுசேன் 80 ஓட்டம் ஆஷ்டன் அகார் 48 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
நன்றி தமிழன்