அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மேரிஸ் பெய்ன் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அவர் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக கூட்டாட்சி அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1997 ஆம் ஆண்டில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லிபரல் கட்சியின் மூத்த அரசியல் பிரமுகர்களில் ஒருவராக கருதப்படும் மேரி பெய்ன், பெண்கள் – பாதுகாப்பு – வெளிநாட்டு மற்றும் சமூக சேவைகள் ஆகிய பதவிகளை வகித்தார்.
செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அவரது ஓய்வு அமலுக்கு வருவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.