மொராக்கோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 120 ஆண்டுகளில் வட ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ஏற்பட்டது.
அதன் மையம் மராகேஷிலிருந்து தென்மேற்கே 71 கிமீ தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்த கடும் அதிர்ச்சியால் மொராக்கோவில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான முஸ்லிம் தேவாலயமும் சேதமடைந்துள்ளது.
120 ஆண்டுகளுக்குப் பிறகு வட ஆபிரிக்கப் பகுதியில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.