சிட்னி நகரில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் இருந்தாலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி சரியான முறையில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
போட்டியாளர்களின் ஆரோக்கியத்திற்காக பல ஏற்பாடுகளை செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
காட்டுத் தீ அபாயத்தைக் குறைக்கும் முன் திட்டமாக அவசர சேவைப் பிரிவினர் தீ மூட்டுவதால் சிட்னியில் சில நாட்களாக கடும் புகை மூட்டமாக உள்ளது.
ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் – முதியவர்கள் உட்பட ஆபத்துக் குழுக்களில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், சிட்னி மாரத்தான் போன்ற உலகப் புகழ்பெற்ற நிகழ்வை ரத்து செய்ய முடியாது என்றும், யாருடைய உயிரையும் பணயம் வைக்காமல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.