4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவான மக்கள் வருகை தந்த மாதமாக ஜூலை மாதம் மாறியுள்ளது.
அந்த மாதத்தில் 17 இலட்சத்து 43 ஆயிரத்து 390 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 10,400 பேர் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் 625,120 பேர் குறுகிய கால சுற்றுலா விசாவில் வந்தவர்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர்கள், இரண்டாம் இடம் சீனாவுக்கும், 03வது இடம் அமெரிக்காவுக்கும் கிடைத்துள்ளது.
ஜூலை மாதம் வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 131,640.
எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.5 வீத வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 14 இலட்சத்து 94 ஆயிரத்து 520 பேர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவிற்கு செல்கின்றனர், நியூசிலாந்து மற்றும் கிரேட் பிரிட்டன் 2 மற்றும் 3 வது இடங்களில் உள்ளன.