Newsலிபியாவை தாக்கிய டேனியல் புயலால் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆக உயர்வு

லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆக உயர்வு

-

லிபியாவில் கனமழையில் மற்றும் நீர்தேங்கியதில், 2 அணைகள் திடீரென வெடித்தன. இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர்.

பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன.

இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடலோர துறைமுக நகரமான டெர்னாவின் மேயர், 18,000 முதல் 20,000 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்னும், ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

டெர்னாவிற்கு வெளியே இடிந்து விழுந்த அணைகள் 1970 களில் கட்டப்பட்டவை என்றும், அவை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கோவிட்-19 தடுப்பூசி

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஒரு புதிய...

McDonald’s ஊழியர்கள் இப்போது கல்லூரி கிரெடிட்களையும் பெறலாம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s, ஊழியர்கள் தங்கள் வேலைத் திறன்களைப் பயன்படுத்தி பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் micro-credentials...

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

மெல்பேர்ணில் டிராம் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி

மெல்பேர்ணின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் Mikey Card Reader புதுப்பிப்புகள் மற்றும் புதிய டிராம்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி,...