Newsடாஸ்மேனியாவில் aged care குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு

டாஸ்மேனியாவில் aged care குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு

-

டாஸ்மேனியாவின் நகர்புறம் அல்லாத பகுதிகளில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமுல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன் பிராந்திய பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம், நோயாளிகளின் பயணச் செலவும், மருத்துவர்களைப் பார்க்கும் நேரமும் குறைக்கப்படும்.

இதன் மூலம் மருந்தாளுனர்களுக்கு பொது வைத்தியர்களுக்குரிய அதிகாரங்களை வழங்குமாறு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், தீவிரமற்ற நோய்களுக்கு மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மேனியா மாநிலத்தின் கிராமப்புறங்களில் மிகக்குறைந்த வசதிகளுடன் வசிக்கும் மக்களுக்கு மருந்தாளுனர்கள் மூலம் மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கு சுகாதாரச் சங்கங்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.

உள்ளூர் மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் இடையே நெருங்கிய உறவைக் கட்டியெழுப்புவதன் மூலம் தரமான சுகாதாரப் பராமரிப்பை இது செயல்படுத்துகிறது.

இருப்பினும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவை மாற்றுவதற்கு அல்லது தீவிர நோய்களுடன் தொடர்புடைய மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் இன்னும் ஒருமித்த கருத்து இல்லை.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...