ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிராக செனட் சபை விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி பயனாளிகளுக்கான நன்மைகளில் தாமதம் உள்ளிட்ட 3 பிரதான குற்றச்சாட்டுகள் செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக காப்புறுதி பயனாளிகளின் குடும்பங்களில் நிகழும் மரணங்களுக்கு காப்புறுதி பணம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த காப்புறுதி நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து நிதி நன்மைகளை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற சேவைகளை வழங்கியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள போதிலும் குறித்த நிறுவனங்கள் உரிய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவை தாமதம் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.