நாளை சமர்பிக்கப்படும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் பட்ஜெட்டில் $224 மில்லியன் மதிப்பிலான வீட்டுவசதி நிவாரணப் பொதி சேர்க்கப்பட்டுள்ளது.
50,000 சமூக வீடுகளை உருவாக்குவதே அதன் முதன்மை இலக்கு என்று மாநில முதல்வர் கிறிஸ் மின்ன்ஸ் அறிவித்தார்.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை மேம்படுத்துவதற்காக நாளைய வரவு செலவுத் திட்டத்தில் 70 மில்லியன் டொலர்கள் உள்ளடக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியாவில் அதிக வீட்டு வாடகை விகிதங்களைக் கொண்ட மாநிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.