அதிக பணவீக்கம் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனப் பொருளாதாரத்தின் சரிவு மற்றும் அண்மைக்காலமாக பெட்ரோல் விலையில் ஏற்பட்டுள்ள விரைவான உயர்வும் இந்த நிலைமையை பாதித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டி விகிதம் மேலும் உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மே 2022 முதல், வங்கி வட்டி விகிதங்கள் 12 முறை அதிகரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பணவீக்கம் 02 அல்லது 03 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் டாக்டர் பிலிப் லா தெரிவித்துள்ளார்.