Newsகையில் கோடாரியுடன் சுற்றிய பெண் அவுஸ்திரேலிய பெண் - சர்ச்சையில் சிக்கிய...

கையில் கோடாரியுடன் சுற்றிய பெண் அவுஸ்திரேலிய பெண் – சர்ச்சையில் சிக்கிய பொலிஸார்

-

அவுஸ்திரேலிய பொலிஸாரல் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நியூகாசில் பகுதியில் இளம்பெண் ஒருவர் கையில் கோடாரி ஒன்றுடன் சாலையில் சென்று கொண்டு இருந்த பொதுமக்களை துரத்தி மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர்.

ஆனால் அந்த பெண் பொலிஸாரையும் கோடாரியால் தாக்க முற்பட்டதால் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியாவது விரைவில் கைது செய்ய வேண்டுமென்ற நோக்கில் ரப்பர் குண்டுகளை கொண்ட துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டனர்.

சுடப்பட்ட அந்த ரப்பர் குண்டு பெண்ணின் மார்பு பகுதியில் பட்டதால் படுகாயமடைந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பொலிஸாரின் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த பெண் 47 வயதுடைய கிறிஸ்டா கேச் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பெண் ஒருவர் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொலிஸாரின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சர்ச்சைக்குரிய ரப்பர் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Latest news

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைத் தடுக்க Jetstar-இன் புதிய திட்டம்

விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதன் அனைத்து விமானங்களையும் அதற்கேற்ப புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக...

ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2025 கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றாகும் (7 ஏப்ரல்). 18 வயதை பூர்த்தி செய்த தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் இன்று (07) இரவு...

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...