Newsவங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

வங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

-

கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக வங்கி நிர்வாகம் வரவு வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, வாடகை கார் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி ராஜ்குமாரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அடுத்த 30 நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது.

முதலில், ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியை கண்ட ராஜ்குமார் போலியாக இருக்கும் என்று நினைத்துள்ளார். பின்னர், வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து செய்தி வந்திருப்பதை உணர்ந்தார்.

வெறும் ரூ.105 மட்டுமே இருந்த வங்கிக் கணக்கில் ரூ. 9,000 கோடி இருப்பதை பார்த்த ராஜ்குமார், தனது நண்பருக்கு ரூ.21,000 அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கிலிருந்த மீதி தொகையை வங்கி நிர்வாகம் மீண்டும் எடுத்துக் கொண்டது.

அடுத்த நாள் காலை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு தவறுதலாக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், செலவு செய்த தொகையை திரும்ப அளிக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் சில வங்கி அதிகாரிகள் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சென்னை திநகரில் உள்ள வங்கிக் கிளைக்கு வழக்கறிஞருடன் நேரில் சென்று ராஜ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில், ராஜ்குமார் செலவு செய்த தொகையை திரும்ப அளிக்க வேண்டாமென்றும், வங்கி சார்பில் கார் கடன் வழங்குவதாகவும் தெரிவித்து, வங்கி அதிகாரிகள் சமரசம் செய்துள்ளனர்.

வங்கியின் தவறால் அரை மணிநேரம் கோடீஸ்வரராக இருந்த ராஜ்குமாருக்கு ஏமாற்றத்துக்கு பதிலாக ரூ.21,000 மிஞ்சியது.

Latest news

செயலிழக்கும் அபாயத்தில் உள்ள மெட்டாவின் WhatsApp மற்றும் Instagram

Meta Platforms Inc ஒரு தசாப்தத்திற்கு முன்பு வாங்கிய இரண்டு முக்கிய தளங்களான WhatsApp மற்றும் Instagram-ஐ விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு முக்கிய...

ஆஸ்திரேலியாவில் Taco Bell-இற்கு நடக்கப் போவது என்ன?

பிரபல மெக்சிகன் உணவுச் சங்கிலியான Taco Bell அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்து மறைந்துவிடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Guzman y Gomez...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

ஆஸ்திரேலியாவின் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக உயரும் பெட்ரோல் விலை

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியால் ஆஸ்திரேலியா முழுவதும்...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

அதிக கட்டணம் வசூலிப்பதாக டாக்ஸி ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஸ்காட்டிஷ் தம்பதியினர் பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திலிருந்து சிட்னி...