Newsகோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

கோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

-

இந்த வார இறுதியில் நாட்டில் கோழிக்கறி தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், ஏஎப்எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கோழி உற்பத்தி நிறுவனமொன்றின் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையே இதற்குக் காரணம்.

இதன்படி, பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் முக்கிய துரித உணவு உணவகங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் தற்போது தங்கள் கடைகளில் சிக்கன் தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளன.

ஊழியர்களின் மணித்தியால சம்பளம் மேலும் 1.5 டொலர்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த சேவைக் காலமான 6 மாதங்களின் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரி ஊழியர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடையாள வேலைநிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் 05 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட கோழி உற்பத்தி நிறுவன ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...