குயின்ஸ்லாந்தில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் நீக்கப்பட்டுள்ளது.
2 வார கால ஆலோசனைகளின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரச சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கட்டாய கோவிட் தடுப்பூசி காரணமாக வேலையை இழந்த குயின்ஸ்லாந்து சுகாதாரப் பணியாளர்கள், அடுத்த வாரம் முதல் பணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 2021 இல், குயின்ஸ்லாந்து சுகாதாரப் பணியாளர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை இந்த விதிமுறையை நீக்குவதில் அவசரம் காட்டுவதாக சுகாதார சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.