Newsகுழந்தைகளுக்கு போர் பயிற்சியளிக்கும் ரஷ்ய பாடசாலைகள்

குழந்தைகளுக்கு போர் பயிற்சியளிக்கும் ரஷ்ய பாடசாலைகள்

-

ரஷ்யாவில் அமைந்துள்ள பாடசாலைகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பாடசாலைகளில் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி வழங்கப்படுகின்றது.

நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பாடசாலை கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட் செலவில் இதில் ரஷ்யா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது.

உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் இராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தினால் வற்புறுத்தப்படுகிறார்கள். உயர்நிலை பாடசாலைகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

மேலும், பாடசாலைகளில் குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷ்ய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

One Nation-இல் சேர Branaby Joyce-இற்கு அழைப்பு!

முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார். Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனக்கும்...

Bluesky-உடன் இணையும் வெள்ளை மாளிகை

எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது. அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள்,...

டிரம்பை சந்திக்க செல்கிறார் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் காணொளி குறித்து கிரிக்கெட் உலகில் சில விவாதங்கள் நடந்தன. இந்த சர்ச்சைக்குரிய காணொளி, கைகுலுக்காததற்காக இந்தியாவை கேலி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ஆசிய...