விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், மாநிலத் தலைமைப் பதவி மற்றும் நாடாளுமன்றத்தில் இருந்து விலகப் போவதாக அவர் அறிவித்தார்.
கடந்த 09 வருடங்களாக விக்டோரியாவின் பிரதமராக கடமையாற்றிய டேனியல் அன்ட்ரூஸ், விக்டோரியா தொழிலாளர் கட்சியை 02 தடவைகள் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் முதன்முதலில் 2002 இல் விக்டோரியா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநில பிரதமர் என்ற முறையில் தன்னால் இயன்றதைச் செய்துள்ளதாகவும், வெளியேற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
பதவியை விட்டு வெளியேறிய பிறகு குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுவேன் என்று டேனியல் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தினார்.