Newsசீனாவின் எச்சரிக்கையை மீறும் அவுஸ்திரேலியா

சீனாவின் எச்சரிக்கையை மீறும் அவுஸ்திரேலியா

-

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949-ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது.

மேலும் தாய்வானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி அவுஸ்திரேலியாவில் இருந்து 6 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவினர் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

தாய்வானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி குறித்து இரு தரப்பினரும் விவாதித்துள்ளனர்.

இதனால் சீனா கடும் கோபமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையினால் சீனா-அவுஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.

அதனை மறுசீரமைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அமைச்சர்களின் இந்த விஜயத்தினால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Latest news

‘அறிவிக்கப்படாத ஒவ்வாமை’ காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட தயிர் பைகள்

Woolworths, Coles மற்றும் ஐஜிஏ கடைகளில் விற்கப்பட்ட தயிர் பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஒவ்வாமை காரணமாக இந்த திரும்பப் பெறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அல்லது 13...

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

TikTok-ஐ வேண்டாம் என்று கூறிய ட்ரம்ப் செய்த காரியம்

வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக TikTok கணக்கைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி, TikTok-ஐ தடை செய்ய முன்பு முயன்றார். 2020 ஆம்...

NSW-வில் 83 வயது முதியவரை தற்செயலாக கத்தியால் குத்திய நபர்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் கார் நிறுத்துமிடத்தில் 83 வயது முதியவர் மீது "முட்டாள்தனமான" மற்றும் "தற்செயலாக" ஒருவர்...