Newsதன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்த சிறுமி!

தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்த சிறுமி!

-

அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலம் கன்சாஸ்ஸில் (Kansas) வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜேலி சில்ஸன் (Jaylee Chillson) எனும் 14 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டாள் என தகவல் வெளியானது.

இத்தகவல் க்ளவுட் கவுன்டி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஜேலி தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா எனும் புறநகர் பகுதியில் ஒரு வெட்டவெளி விருந்தில் கலந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு முதற்கட்ட தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவளை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது ஒரு பொலிஸ் அதிகாரி அவள் தப்பி செல்லாதவாறு இருக்க அவளை பிடிக்க முயன்றார்.

ஆனால், அதிகாரிகள் என்ன சொல்லியும் கேட்க மறுத்த குறித்த சிறுமி, ஒரு கட்டத்தில் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொண்டார்.

குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விருந்துக்கு வந்திருந்த பலரிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது மகளை பறி கொடுத்த ஜேலியின் தந்தை உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...