விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது என மாநில அரசின் ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சாலைப் பராமரிப்புக்கு விதிக்கப்படும் வரிக்கு இணையான வரி விதிக்கப்படும் என்றும், அது தீங்கு விளைவிக்கும் காற்று மாசுவைத் தடுக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா வீதிகளில் இயங்கும் ஒவ்வொரு கிலோமீற்றர் மின்சார வாகனங்களுக்கும் இந்த கட்டணம் 02 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த சட்டத்தை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.
கார்பன் உமிழ்வு இலக்குகளை எட்டுவதற்கு மின்சார வாகனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அதிக வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.