ஆஸ்திரேலியாவில் உள்ள ஊனமுற்ற சமூகத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க 222 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ராயல் கமிஷனின் 4 1/2 வருட ஆய்வின் முடிவில் இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் மட்டத்திலும், அரசு சாரா நிறுவனங்கள் மட்டத்திலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான தனிப் பாடசாலைகள் 2051ஆம் ஆண்டிற்குள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கியுள்ளது.
இந்த காலகட்டத்தில், 32 பொது விசாரணைகளில் 837 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், 7,944 தனிப்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டதாக ராயல் கமிஷன் அறிவித்தது.