மெல்போர்னில் திட்டமிடப்பட்டிருந்த ரயில் வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் 06 மற்றும் 11 ஆகிய இரு தினங்களுக்கு இந்த வேலைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டிருந்தது.
விக்டோரியா மாகாண அதிகாரிகளால் 04 வருட காலப்பகுதியில் 17 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என உறுதியளித்து இந்த பணிப்புறக்கணிப்புகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் வெள்ளிக்கிழமையும், அடுத்த வாரம் புதன்கிழமையும் திட்டமிட்டபடி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.