Newsஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ!

ஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ!

-

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏற்பட்ட புதர் தீயில் 42,000 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள புதர் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டபோது காற்றானது பலமாக வீசியதால் தீயானது மளமளவென பரவியது.

வெறும் 24 மணி நேரத்தில் தீயானது 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்தது.

புதர்த் தீயானது 3 மடங்கு வேகத்தில் பரவ தொடங்கியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு கொடுக்கப்பட்டது.

இந்த பயங்கர தீயை அணைக்க சுமார் 650 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மழையானது தீயை அணைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...