168 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு மெல்போர்னில் செப்டம்பர் மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு நாட்டிலேயே மிகவும் வறண்ட செப்டம்பர் மாதம் 4.88 மிமீ சராசரி மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
1900-க்குப் பிறகு ஒரு மாதத்தில் பதிவான மிகக் குறைந்த மழைப்பொழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
விக்டோரியா கடந்த மாதம் வறண்ட மாநிலமாக மாறியது, அதைத் தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ்.
ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் செப்டெம்பர் மாத வெப்பநிலை 2.43 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நியூ சவுத் வேல்ஸில் சராசரி வெப்பநிலை 05 டிகிரி செல்சியஸாலும், விக்டோரியாவில் சராசரி வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியஸாலும் அதிகரித்துள்ளது.
எல் நினோ காலநிலையுடன் நாட்டில் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.