News40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர்...

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 பேர் சிட்னியில் கைது

-

40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 சந்தேகநபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த சரக்கு விமானத்தின் சேமிப்பு முனைய கொள்கலனொன்றில் குறித்த கொக்கேய்ன் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

விமான நிலைய பணியாளர்கள் இருவரும், விமான நிலையத்திற்கு வெளியே கொக்கெய்னை எடுத்துச் சென்று காரில் வந்த 24 வயதுடைய ஒருவரிடம் கொடுத்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரான 42 வயதுடைய நபரும் மற்றுமொரு நபரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 24 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 5 அவுஸ்திரேலியர்களும் நவம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...