Sportsஆப்கானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி - உலக கிண்ண தொடர்...

ஆப்கானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 08 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் அணித்தலைவர் Hashmatullah Shahidi 80 ஓட்டங்களையும் Azmatullah Omarzai 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Jasprit Bumrah 4 விக்கெட்டுக்களையும், Hardik Pandya 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 131 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

மேலும், இன்றைய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா இரண்டு உலக சாதனைகளை முறியடித்திருந்தார்.

உலகக்கிண்ணத் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

இதேவேளை, விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Latest news

மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள ரிசர்வ் வங்கி

ஆகஸ்ட் மாத நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) ரொக்க விகிதத்தை 0.25 சதவீதப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதன்படி, முந்தைய 3.85% வட்டி விகிதம்...

போப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ள சூப்பர் ஸ்டார் Madonna

பட்டினியால் வாடும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக மனிதாபிமானப் பணிக்காக காசாவுக்கு வருமாறு மடோனா போப்பிடம் கேட்டுக்கொள்கிறார். ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்ட அமெரிக்க சூப்பர் ஸ்டார் Madonna,...

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

மெல்பேர்ணில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் கிழக்கில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த பெண்ணைக் கொலை செய்ததாக ஒரு ஆண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சற்று முன்பு போலீசார்...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...