2022/2023 நிதியாண்டில் NSW இல் மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் சேவை வழங்குநர்களுக்கு எதிராக 17,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இது 2021/2022ல் இருந்து 22 சதவீதம் அதிகமாகும் என்று ஒம்புட்ஸ்மேன் NSW வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
மின்சாரத் துறை தொடர்பான புகார்களில் அதிகபட்சமாக 11,972 புகார்கள் வந்துள்ளன.
எரிவாயு நிறுவனங்கள் தொடர்பான புகார்களின் சதவீதம் 18 ஆகவும், தண்ணீர் நிறுவனங்கள் மீதான புகார்களின் எண்ணிக்கை 04 சதவீதமாகவும் உள்ளது.
மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவது தொடர்பாகவும் கணிசமான எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.