Sportsஇந்திய அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இந்திய அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி வென்ற நிலையில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், மொஹம்மட் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, ரோஹித் சர்மா 86 ஓட்டங்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 02 ஓட்டக்ளுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நன்றி தமிழ்

Latest news

மெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய...

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் பற்றி வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...

பயணியின் பொதியில் இருந்த முதலை தலை!

கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் 'முதலை மண்டை ஓடு' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில்...

ஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் சீட் பெல்ட்களை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவோம் என மத்திய அரசு...