பொது வாக்கெடுப்பு முன்மொழிவு தோல்வியடைந்தது குறித்து தேசிய மற்றும் பசுமைக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உண்மை மற்றும் நீதிக்கான ஆணையத்தை நியமிக்க தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமைத் தலைவர் ஆடம் பேண்ட் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக 250 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஆடம் பேண்ட், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனும் பிரச்சாரத்தின் போது தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்குவதற்காக மட்டுமே பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தால், அது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தேசியக் கட்சியின் தலைவர் டேவிட் லிட்டில்ப்ரூட் கூறுகிறார்.