உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கான் அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கான் ஆகிய அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ஓட்டங்களையும், இக்ராம் அலிகில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 42 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 40.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
அணிசார்பில், அதிகபடியாக ஹாரி புரூக் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், ஆப்கான் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 51 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
குறித்த இந்த வெற்றியினால் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. உலகக் கிண்ண தொடரில் 8 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி பெற்றுள்ளது.
உலக கிண்ண தொடரின் புள்ளிப்பட்டியல்