குயின்ஸ்லாந்தின் பிராந்திய விமானப் போக்குவரத்து துறையில் சுமார் 16,000 வேலைகள் வரும் ஆண்டுகளில் குறைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் அதிக சத்தத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க மாநில அரசு தயாராகி வருவதே இதற்கு காரணம்.
பிரிஸ்பேன் விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட முழு திட்டமும் 2042 க்குள் செயல்படும்.
எனினும் இது குயின்ஸ்லாந்து பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் விமானக் கட்டணம் கூட கணிசமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.