Sportsஅவுஸ்திரேலிய அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 78 ஓட்டங்களை குசல் பெரேரா பெற்றதுடன்பாத்தும் நிஸ்ஸங்க 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, ஜோஷ் இங்லிஸ் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...