Cinemaநடிகராக மாறியது குறித்து கருத்து வெளியிட்ட கவுதம் மேனன்

நடிகராக மாறியது குறித்து கருத்து வெளியிட்ட கவுதம் மேனன்

-

நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கவுதம் மேனன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்துவருகிறது.

இந்த நிலையில் நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் தெரிவித்துள்ளார். அதன்படி “நான் விரும்பி நடிகனாகவில்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்திலும் சினிமாவில் நடிக்கவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காகவே நடிகனாக மாறினேன்.

அந்தந்த படங்களில் நான் நடித்ததற்காக கிடைத்த சம்பளத்தை துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கவும், ரிலீஸ் செய்யவும் பயன்படுத்தினேன். அதேபோல சினிமாவில் வாய்ப்புகள் கொடுக்கும்படி இதுவரை நான் யாரையும் கேட்கவில்லை. எத்தனையோ பட வாய்ப்புகளை நிராகரித்தும் இருக்கிறேன்” என்றுள்ளார்.

தற்போது விஜய்யின் லியோ படத்திலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கி உள்ள துருவ நட்சத்திரம் படத்தை பல தடைகளை தாண்டி திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Latest news

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...

பசுமைத் தொட்டியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

பச்சை நிற குப்பைத் தொட்டிகளை சரியாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய கவுன்சில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரிஸ்பேர்ணில் உள்ள Redland நகர சபையில் உள்ள கழிவுத் தொழிலாளர்கள் சமீபத்தில் சாலையின்...

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது...

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது...