விக்டோரியா மாநில அரசு வாகனம் ஓட்டுவதில் மருத்துவ கஞ்சாவின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த தயாராகி வருகிறது.
தற்போது, இதுபோன்ற பயன்பாட்டிற்குப் பிறகு வாகனம் ஓட்டுவது மாநிலத்தில் சட்டவிரோதமாக உள்ளது.
எனினும், விக்டோரியா மாநில அரசு, மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை தளர்த்த தயாராகி வருகிறது, அதற்கு முன்னதாக இந்த ஆய்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
2016 ஆம் ஆண்டில், மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய ஆஸ்திரேலியாவின் முதல் மாநிலமாக விக்டோரியா ஆனது.
கடந்த இரண்டு வருடங்களில் இவ்வாறான சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 700 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மனநோய்களுக்கு இத்தகைய சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கம்.