தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக் கல்வித் துறைக்கு கூடுதலாக 13 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
தற்போது கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை உள்ள வேலைத் துறைகளில் அந்த பற்றாக்குறையை சமாளிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அரசுகளுடன் மத்திய அரசு இதுபோன்ற ஒப்பந்தம் செய்து கொள்வது இதுவே முதல்முறை என்பதும் சிறப்பு.
இந்தத் தொகை 05 வருட காலத்திற்கு ஒதுக்கப்படும் என பயிற்சி மற்றும் திறன் அமைச்சர் பிரெண்டன் ஓ’கோனர் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் 153 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் வேலைகளின் பட்டியல் தற்போது 286 ஆக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.