Sportsஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து அணி - உலக கிண்ண தொடர் 2023

ஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து அணி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கான் அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் சென்னை மைதானத்தில்; ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips அதிகப்பட்சமாக 71 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Tom Latham 68 ஓட்டங்களையும் Will Young 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

289 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

அந்த அணி சார்பில் Rahmat Shah அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றதுடன் Ikram Alikhil ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Mitchell Santner மற்றும் Lockie Ferguson ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி நியூசிலாந்து அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியிலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான Bob Simpson காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயது, சிட்னியில் காலமானதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நான்கு...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...