நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சர்வதேச மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போலி கடத்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல் தொடர்பான போலி அழைப்புகள் மற்றும் பணம் கொடுப்பது போன்ற செய்திகளுக்கு உடனடியாக பதில் அளிப்பதை தவிர்க்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.
குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களை குறிவைத்து தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதாக கூறி மோசடி செய்பவர்கள் கப்பம் பெற்று வருகின்றனர்.
ஒக்டோபர் மாதத்தின் முதல் சில நாட்களில் மாத்திரம் இவ்வாறான 03 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமானது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கப்பம் கோருபவர்கள் சீன மாண்டரின் மொழி பேசுவதாகவும், குறித்த மோசடி செய்பவர்கள் சீன அதிகாரிகள் போன்று காட்டிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
பொய்யாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவர்கள் தமக்கு ஏதோ குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி கைது செய்து நாடு கடத்துவதைத் தடுக்க கப்பம் கேட்பது தெரியவந்துள்ளது.
கடந்த தசாப்தத்தில் இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட போலி கடத்தல்கள் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.