Sportsஇந்திய அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இந்திய அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது போட்டியில் நேற்று (19) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

புனேவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணி சார்பில் அதிகபடியாக, லிட்டன் தாஸ் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 38 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

257 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 103 ஓட்டங்களையும், சுப்மன் கில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் 47 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான Bob Simpson காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயது, சிட்னியில் காலமானதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நான்கு...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...