பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகள் கொள்முதல் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன்படி, பிரபல பிராண்டுகளின் பால் தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வார இறுதிக்குப் பிறகு விநியோகம் சீராகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு விதித்துள்ள தொடர் புதிய விதிமுறைகள் குறித்து கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களால் பால் விலை வேகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.