குயின்ஸ்லாந்து மாநில கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சாலமன் தீவுகள் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இதனைப் பாதித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரத்தில் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு சூறாவளியின் தாக்கம் நகரும் எனவும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பமண்டல சூறாவளி நிலை பொதுவாக நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும், இந்த நிலையின் வளர்ச்சி ஆண்டின் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் சூறாவளி நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் குயின்ஸ்லாந்து மக்களுக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.