விக்டோரியாவின் முன்னணி விளையாட்டுக் கூட்டமைப்புகளில் ஒன்றான VicSport, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகுவது குறித்து விசாரிக்க செனட் குழுவில் இணைந்து முன்னாள் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
3.9 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களையும் 16,000 விளையாட்டு அமைப்புகளையும் கொண்ட VicSport, விளையாட்டுகளை ரத்து செய்யும் முடிவு விளையாட்டு வீரர்கள் உட்பட பயிற்சியாளர்களின் உரிமைகளை மீறுவதாக சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச விளையாட்டு நிகழ்வு இரத்து செய்யப்படுவதானது முழு நாட்டிற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ், 2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அதிக செலவு காரணமாக ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், செலவு அதிகரிப்பு தொடர்பான உரிய மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பொருத்தமான வேறு நகரத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காதது சிக்கலாக உள்ளதாக VicSport கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், கோல்ட் கோஸ்ட் நகரம் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தயாராக இருந்தால், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க விக்டோரியா மாநில அதிகாரிகள் தங்கள் உடன்பாட்டைத் தெரிவித்தனர்.